பழைய ஏற்பாடு
திருப்பாடல்கள் › அதிகாரம் 134
திருப்பாடல்கள் › அதிகாரம் 134
1 இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
2 தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள்.
3 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக!