திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

யோபு › அதிகாரம் 25

யோபு 25

கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்

1 பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:

2 ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்.

3 அளவிட முடியுமா அவர்தம் படைகளை? எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?

4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?

5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!

6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!