திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

ஒசேயா › அதிகாரம் 3

ஒசேயா 3

ஒசேயாவும் உண்மையற்ற மனைவியும்

1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: "இஸ்ரயேல் மக்கள் வேற்றுத் தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை* விரும்புகின்றனர். எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும் விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல் காதல் கொள்."1

2 அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும்* ஒன்றரை கலம்** அளவுள்ள வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக்கொண்டேன்.23

3 பின்பு நான் அவளை நோக்கி, 'நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன்' என்றேன்.

4 இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி, பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி, குலதெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள்.

5 அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்; இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்.

குறிப்புகள்

1 - இவை பாகால் வழிபாட்டில் படைக்கப்பட்டவை.

2 - "பதினைந்து செக்கேல் நிறையுள்ள வெள்ளி" என்பது எபிரேய பாடம்.

3 - "ஒன்றரை கோமர்" என்பது எபிரேய பாடம்.